செய்திகள்

கிரானைட் மோசடி வழக்கு விசாரணை ஆகஸ்டு 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு: மேலூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2016-07-26 17:15 IST   |   Update On 2016-07-26 17:15:00 IST
பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக தொடரப்பட்ட 42 வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கீழவளவு, திருவாதவூர், ஒத்தக்கடை சிவலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சுப்பிரமணியன், பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்கள் மீது 42 வழக்குகளை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மேலூர் மாஜிஸ்திரேட்டு செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் 42 வழக்குகளையும், ஆகஸ்டு மாதம் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் செல்வக்குமார் உத்தரவிட்டார்.

Similar News