செய்திகள்
கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் முதலாவது அணு உலையில் 830 மெகாவாட் முதல் 850 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
2-வது அணு உலையில் சோதனை அடிப்படையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 14-ந்தேதி சோதனைக்காக 2-வது அணு உலை இயக்கம் நிறுத்தப்பட்டது. கடந்த 31-ந்தேதி 2-வது அணு உலை இயக்கப்பட்டு வணிக ரீதியில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு 2-ந்தேதி 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
அதன் பிறகு சற்று குறைக்கப்பட்டு 850 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்பட்டது. நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை 2-வது அணு உலையில் 720 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6.50 மணி அளவில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் 2-வது அணு உலை இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் முதலாவது அணு உலையில் இருந்து மட்டும் 830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.