செய்திகள்

தலித்துகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-04-04 13:08 IST   |   Update On 2017-04-04 13:08:00 IST
தலித்துகள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி:

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த தலித் இன பெண் ஐஸ்வர்யா, காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து குரும்பலூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரம்பலூர் குரும்பலூரை சேர்ந்த தலித் இன பெண் ஐஸ்வர்யா, அவரது காதலனை திருமணம் செய்யும் நிலையில் இருந்த போது மர்மமான முறையில் இறந்தார். ஆனால் ஐஸ்வர்யா காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் முதல் எதிரியான ஐஸ்வர்யாவின் காதலனை வெளிநாட்டுக்கு தப்பி செல்ல போலீசார் உதவி செய்துள்ளனர்.

தலித்துகள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே தமிழக அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி, ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நெல்லையில் தலித்துகளின் வீடுகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News