செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை படத்தில் காணலாம்

அனுமதியின்றி மணல் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2018-02-06 13:58 IST   |   Update On 2018-02-06 13:58:00 IST
மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக 6 டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் சோழ சிராமணி பகுதியிலிருந்து 6 டாரஸ் லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றனர்.

பாசூர் பெருந்துறை வழியாக இந்த 6 லாரிகளும் கோவைக்கு சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அடுத்த பட்டாசு பாலி என்ற இடத்தில் இந்த லாரிகள் வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மொடக்குறிச்சி தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் அந்த லாரிகளை மடக்கினர்.

அதை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

இதையொட்டி அந்த 6 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆர்.டி.ஓ. வந்து பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். #tamilnews

Similar News