செய்திகள்

கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரூ.7,508 கட்டண பாக்கியால் தொலைபேசி துண்டிப்பு

Published On 2018-11-29 13:16 IST   |   Update On 2018-11-29 13:16:00 IST
கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரூ.7,508 கட்டண பாக்கி தொகையை கட்டாததால் தொலைபேசி எண் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்டது கவரைப்பேட்டை போலீஸ் நிலையம். இது கும்மிடிப்பூண்டிக்கும் சோழவரத்திற்கும் இடையே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூரில் அமைந்துள்ளது.

இந்த போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்.27975461. இந்த எண்ணிற்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை உள்ள பாக்கித்தொகை ரூ.7,508 ஆகும்.

பாக்கி தொகை கட்டாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இன்கம்மிங் வசதியை மட்டும் தொலைபேசி துறை வழங்கி இருந்தது.

இந்த நிலையில் பாக்கி தொகை கட்டாததாலும், அதன் காலக்கெடுவும் கடந்து விட்டதாலும் கடந்த 1 மாதத்திற்கு மேலாக போலீஸ் நிலைய தொலைபேசி எண் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் அதிக அளவில் விபத்துகளும், குற்றச்சம்பவங்களும் நடைபெறும் கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்ணை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News