செய்திகள்
முக அழகிரி

நில அபகரிப்பு வழக்கு விசாரணை - மு.க.அழகிரி கோர்ட்டில் ஆஜர்

Published On 2019-10-23 11:28 IST   |   Update On 2019-10-23 11:28:00 IST
நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்காக மு.க.அழகிரி கோர்ட்டில் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணை நவம்பர் 13-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்காக அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் புகார் கூறப்பட்டது.

புகார் மனு மீதான விசாரணை மதுரை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, சதீஷ்குமார், ஆதிலட்சுமி, சம்பத்குமார் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மு.க.அழகிரி உள்ளிட்ட 4 பேரும் ஆஜரானார்கள். தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 13-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Similar News