செய்திகள்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மகளைப் பார்க்க காவிரி ஆற்றில் நீந்தி வந்த தந்தை பலி
மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மகளைப் பார்க்க காவிரி ஆற்றில் நீந்தி வந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
மேட்டூர்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45), பழவியாபாரி. இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகள் சுமதிக்கும், கர்நாடக மாநிலம் கோபிநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பிணியான சுமதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மகளைப் பார்ப்பதற்காக பெருமாளும், மணிகண்டன் தந்தை வெங்கடாஜலம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனால் கர்நாடக எல்லையில் போலீசார் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.
பின்னர் 2 பேரும் காவிரி ஆற்றில் நீந்தி மேட்டூர் வர முடிவு செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்கள். ஒருமணி நேரத்திற்கு பிறகு வெங்கடாஜலம் எல்லையை கடந்து பாலாறு அருகே கரையேறி விட்டார். ஆனால் பெருமாள் வந்து சேரவில்லை.
இதுகுறித்து தகவல் கிடைத்த தீயணைப்புத் துறை வீரர்கள் காவிரி ஆற்றில் குதித்து பெருமாளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று பெருமாள் பிணமாக மீட்கப்பட்டார். பிணம் மீட்கப்பட்ட இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பது தொடர்பாக போலீசார் இடையே சர்ச்சை உருவானது.
இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் பிணம் மீட்கப்பட்ட இடம் தமிழக எல்லைக்குட்பட்டது என கூறினார்கள். மேலும் பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதி சேலம் மாவட்டமாக இருந்தாலும், அதன் கரையில் உள்ள வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்தில் இருந்தது.
இதனால் பிணத்தை அகற்றுவதில் கொளத்தூர் போலீசாருக்கும், ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய சம்மதித்தனர்.