செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய முதியவர் 3 மாதகாலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த 2 நாட்களாக உடல் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து அந்த முதியவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டது. நேற்று இரவு அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 57 வயதுடைய முதியவர் இறந்தார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 35 வயது உள்ள வாலிபருக்கும் நேற்று இரவு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 445 பேர் நேற்று வரை குணம் அடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
கடலூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று வரை 481-ஆக இருந்தது. இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் 492-ஆக அதிகரித்துள்ளது.