செய்திகள்
திருவாரூரில் 27ந்தேதி முதல் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு
திருவாரூரில் 27ந்தேதி முதல் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகளை வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
திருவாரூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 27 முதல் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையே செயல்படும் என்று வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக உணவகங்கள் இரவு 8 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.