தமிழ்நாடு
பாலியல் தொல்லை

ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபர்

Published On 2021-12-11 07:42 GMT   |   Update On 2021-12-11 07:42 GMT
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவம் குறித்து நண்பர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழித்துறை:

குழித்துறையை அடுத்த இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாதச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அவருக்கு பண நஷ்டம் ஏற்பட்டது. இதனை ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் உதவி கேட்டார்.

அந்த வாலிபர், மாணவிக்கு பண உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதற்காக அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசினார்.

மாணவியுடன் நெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இருவரும் வாட்ஸ்-அப்பிலும் பேசத் தொடங்கினர். அப்போது மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அந்த வாலிபர் மாணவியின் ஆபாச படங்களை நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அவர்களும் மாணவியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் மாணவி கொடுத்த புகாரின் பேரில் 4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News