நிதிநிறுவன மோசடி குறித்து விசாரிக்க 30 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை
- மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம் 21 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது.
- வங்கி கணக்கில் இருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது அவர்களுடை ஆசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை:
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பீடுகளுக்கு மாத வட்டியாக 25 சதவீத முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களி டம் இருந்து சுமார் 2438 கோடி முதலீடு பெற்றுள்ளது.
மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம் 21 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது.
இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் பேச்சிமுத்து ராஜா அய்யப்பன் ரூசோ ஹாரிஸ் மாலாதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனார்.
வெளி நாடுகளுக்கு தப்பி சென்றவர்களை பிடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடியும் தங்கம் வெள்ளி பொருட் கள் 1.13 கோடி மதிப்பு கைப்பற்றி உள்ளனர்.
வங்கி கணக்கில் இருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது அவர்களுடை ஆசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது.
ஹிஜாவு நிறுவனம் தொடங்கி 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து 4400 கோடி வரை டெபாசிட்டுகள் பெற்று மாதம் தோறும் வட்டி மற்றும் தொகையை திருப்பி செலுத்தவில்லை இதனு டைய 19 துணை நிறுவ னங்கள் மேலாண்மை இயக்குநர்கள் கமிட்டி உறுப்பினர் என 52 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டு உள்ளது. இதில் நேரு, குருமணி கண்டன், முகம்மது, ஷெரிப், சாந்தி, பால முருகன், கல்யாணி, சுஜாதா, பாலாஜி, பாரதி, ரவிச்சந்திரன், சுஜாதா அலெக்சாண்டர் மகா லட்சுமி ஆகியோர் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 162 வங்கி கணக்குகளில் உள்ள ரூ.14.47 கோடி முடக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியிடம் சுமார் ரூ.45 கோடி மதிப்பு உள்ள அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.
எல்.என்.எஸ். நிறுவனத்தை தொடங்கி 84 ஆயிரம் நபர்களிடம் இருந்து சுமார் 5900 கோடி முதலீடி பெற்று ஏமாற்றி உள்ளனார்.
இதனுடைய மற்றும் 5 துணை நிறுவனங்களில் மொத்தம் 19 பேர் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டு அதில் 3 பேரை கைது செய்து உள்ளனர்.
குற்றவாளிகள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து 1.12 கோடியும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் 34 லட்சம் 16 கார்கள் குற்றவாளிகள் சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அனைத்து எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் இன்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசையம்மாள் தலைமையில் நடந்தது. இதில் ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., ஐ.எஸ்.ஐ. நிதி நிறுவன வழக்கை விசாரிக்க 30 பேர் கொண்ட 30 தனிப்படை அமைக்க முடிவு செய்யப்பட்டது.