தமிழ்நாடு
திருவண்ணாமலை கோயில் அருகே கட்டுமான பணிகளுக்கு தடை
- கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜ கோபுரத்திற்கு எதிரில், அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படுவது தொடர்பாக சிறப்பு அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கோபுர தரிசனம் தடுக்கப்படும் எனவும் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.