தமிழ்நாடு

உணவகங்களில் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை

Published On 2023-08-04 05:05 GMT   |   Update On 2023-08-04 05:05 GMT
  • சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை எங்கும் திறக்கப்பட கூடாது.
  • விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

சென்னை:

தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை (புகைக்குழல் கூடம்) எங்கும் திறக்கப்பட கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகை பிடிக்கும் கூடத்தில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை ரூ.20 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News