தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2023-07-22 04:58 GMT   |   Update On 2023-07-22 04:58 GMT
  • காத்திருப்பு போராட்டங்களை கடந்த 17 நாட்களாக நடத்தி வருகிறது.
  • விவசாயத்தை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு காலத்தே நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,000, கரும்பு டன்னுக்கு ரு.5,000 நிர்ணயம் செய்யவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தவும், உழவர்களின் நில உரிமையை உறுதி செய்யவும், வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கவும், அனைத்து உழவர்களுக்கும் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கவும், ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், அப்பர் அமராவதி அணை திட்டத்தை செயல்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு முன்வைத்து, நிறைவேற்றக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் காத்திருப்பு போராட்டங்களை கடந்த 17 நாட்களாக நடத்தி வருகிறது.

எனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் காலத்தே நிறைவேற்றி விவசாயத்தை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News