சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- தமிழிசை சவுந்தர ராஜன் வாழ்த்து செய்தியில் கவர்னராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
- சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், நான் பெரிதும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கவர்னராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்ட, பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.