தி.மு.க. ஆட்சியில் தொழில் முடங்கி கிடக்கிறது- பொள்ளாச்சி ஜெயராமன்
- அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன.
- புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோல்டன் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் திமுக., ஆட்சியில் எங்கேயாவது ஒரு வீடாவது கட்டிக் கொடுத்திருக்கிறார்களா? அதுமட்டுமல்ல , அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். அதையும் நிறுத்திவிட்டார்கள்.
திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,அரசு வட்டியில்லா கடன் 200 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆட்சி யில் தொழில் முடங்கி கிடக்கிறது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி தி.மு.க., ஆட்சி. எப்போது ஸ்டாலின் வந்தாலும் அந்த ஆட்சியினுடைய அலங்கோலத்தை மக்கள் அனுபவிக்கிறோம்.
ஏழை எளிய மக்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 450 டாக்டர்களையும் உருவாக்கியது அ.தி.மு.க.,தான். இவ்வாறு அவர் பேசினார்.