தமிழ்நாடு

நெம்மேலியில் பராமரிப்பு பணி- திருவான்மியூர், வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தம்

Published On 2022-07-22 08:59 GMT   |   Update On 2022-07-22 08:59 GMT
  • கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை:

நெம்மேலியில் உள்ள நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் கொட்டிவாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் 25-ந் தேதி காலை 9 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிக்கு 81499 30913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிக்கு 81449 30914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிக்கு 81449 30915 ஆகிய எண்களில் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்று கொள்ள அணுகலாம் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News