தமிழ்நாடு
நெய் விலை உயர்வு: அன்புமணி ராமராஸ், டி.டி.வி. தினகரன் கண்டனம்
- கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் கடும் பாதிப்பு ஏற்படும்.
- பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பால் பொருட்கள் விலையை உயர்த்துவது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும்.
சென்னை:
தமிழ்நாட்டில் ஆவின் நெய் விலை அனைத்து அளவுகளிலும் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதுபோல அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பால் பொருட்கள் விலையை உயர்த்துவது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.