தமிழ்நாடு

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை- காலை 7 மணி வரை நீடிக்கும் என தகவல்

Published On 2023-08-29 04:54 IST   |   Update On 2023-08-29 04:54:00 IST
  • சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
  • தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News