தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமான வரி சோதனை

Published On 2023-11-06 10:34 IST   |   Update On 2023-11-06 10:34:00 IST
  • எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
  • கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

வேங்கிக்கால்:

தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப்பணி ஒப்பந்தாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட், ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்தது.

Tags:    

Similar News