தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க உத்தரவு- சென்னை ஐகோர்ட்

Published On 2024-06-26 08:43 GMT   |   Update On 2024-06-26 08:59 GMT
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது.

சென்னை:

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News