தமிழ்நாடு

முசிறி கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு

Published On 2024-06-29 08:17 GMT   |   Update On 2024-06-29 08:17 GMT
  • இந்த ஆண்டு 2 ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற இலக்கில் இந்த கோவிலும் இடம் பெற்றுள்ளது.
  • கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் கோவிலில் இறுதி நாள் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

சென்னை:

சட்ட சபையில் கேள்வி நேரத்தில், பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆலத்தூர் ஊராட்சி முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முசிறி கைலாசநாதர் கோவிலில் ஏற்கனவே 5 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு 2 ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற இலக்கில் இந்த கோவிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் கோவிலில் இறுதி நாள் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பத்ரகாளியம்மன் கோவில் விழாவிற்கு அரசு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கருத்துரு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

Tags:    

Similar News