தமிழ்நாடு
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
- அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது.
- மாவட்டத்துக்கு ஒரு தங்கும் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை:
மதுராந்தகம் தொகுதியில், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில் அளித்து கூறியதாவது:-
அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்துக்கு ஒரு தங்கும் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.