கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்- ஜி.வி.பிரகாஷ்
- ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
- உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.