தமிழ்நாடு

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு புறா பந்தயம்- 750 கி.மீ. தூரத்தை 14 மணி நேரத்தில் கடந்து வந்து வெற்றி

Published On 2023-02-28 12:45 IST   |   Update On 2023-02-28 12:45:00 IST
  • ஆந்திர மாநிலம் சிங்கராயக் கொண்டாவிலிருந்து தூத்துக்குடிக்கு 750 கி.மீ. நடைபெற்ற புறா பந்தயத்தில் மொத்தம் 300 புறாக்கள் பறக்க விடப்பட்டன.
  • வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு கிளப் பொருளாளர் சாவியோ பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஹார்பர் ரேசிங் பிஜியன் கிளப் சார்பாக புறா பந்தயம் நடத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் சிங்கராயக் கொண்டாவிலிருந்து தூத்துக்குடிக்கு 750 கி.மீ. நடைபெற்ற புறா பந்தயத்தில் மொத்தம் 300 புறாக்கள் பறக்க விடப்பட்டன. பந்தய தூரத்தை 14 மணி நேரம் 33 நிமிடங்களில் கடந்து வக்கீல் சதீஷ்வரன் என்பவரது புறா முதலிடத்தையும்,15 மணி 52 நிமிடத்தில் கடந்து ராஜேஷ் புறா இரண்டாம் இடம், 16 மணி 59 நிமிடத்தில் கடந்து வக்கீல் சதீஷ்வரன் என்பவர் புறா மூன்றாமிடத்தையும் பெற்றது.

வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு கிளப் பொருளாளர் சாவியோ பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கிருஷ்ணா மற்றும் தூத்துக்குடி வக்கீல் சங்க நிர்வாகி மணிகண்டராஜா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News