பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேலூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி
- பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார்.
- சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார்.
வேலூர்:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இதுவரை 6 முறை தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று சென்னையில் நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக 7-வது முறையாக தமிழகம் வந்தார்.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி, அரக்கோணம் வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை அஸ்வத்தாமனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.