தமிழ்நாடு

புத்தளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்களை காணலாம்.

குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை- மயிலாடியில் 9.2 மில்லி மீட்டர் பதிவு

Published On 2023-04-08 13:03 IST   |   Update On 2023-04-08 13:03:00 IST
  • சுசீந்திரம், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், சாமிதோப்பு, தெங்கம்புதூர், புத்தளம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது.

சுசீந்திரம், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், சாமிதோப்பு, தெங்கம்புதூர், புத்தளம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடியில் அதிகபட்சமாக 9.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

இன்று காலை அணையின் நீர்மட்டம் 5 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மழை பெய்ததையடுத்து வெப்பம் தணிந்து காணப்பட்டது. இன்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்தது.

Tags:    

Similar News