'தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது' - அன்புமணி
- பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது.
- சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
சேலம்:
சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"நமது அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என்று கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய உரிமையை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன பயம்? கணக்கெடுப்பு நடத்த பஞ்சாயத்து தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது. 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகிவிட்டால் அன்றைய தினமே தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும். ஏனென்றால், 69 சதவீத இடஒதுக்கீடு நமக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை, பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது. அதை காப்பாற்றுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.