தமிழ்நாடு
ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: நயினார் நாகேந்திரன் உறவினர் ஆஜர்
- பணம் கொண்டு சென்றது தொடர்பாக 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
- நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னை:
பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.4 கோடி கொண்டு சென்ற பணம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்கியது. இதுதொடர்பாக சதீஷ், முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணம் கொண்டு சென்றது தொடர்பாக 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர்கள் இருவரும் ஆஜர் ஆனார்கள்.
இதையடுத்து விரைவில் ஆஜராக நயினார் நாகேந்தரனுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.