அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது: சீமான்
- பாராளுமன்ற தேர்தலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கி விட்டோம்.
- மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன.
கோவை:
கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கி விட்டோம். நான் ஒரு தமிழ் தேசிய மகன் என்பதால் தமிழ் நிலத்துக்கான தேர்தலில்தான் போட்டியிடுவேன். ஆனால் தமிழகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் எதிராக இருக்கிறது. டெல்லி, பஞ்சாப்பில் கெஜ்ரிவால் காங்கிரசை எதிர்க்கிறார். ஆனால் இந்தியா என்ற கூட்டணியில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதனால் இந்த கூட்டணி வேடிக்கையானதாக இருக்கிறது.