மழைவெள்ளத்தால் ஆரணி ஆற்றில் சிக்கும் பெரியவகை மீன்கள்
- திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது.
- பெரியவகை மீன்கள் ஏராளமாக குவிந்து உள்ளன.
பொன்னேரி:
மாண்டஸ் புயல் மற்றும் பருவமழை காரணமாக பெய்த பலத்த மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 500 கன அடி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது. பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ள நிலையில் பொன்னேரி ஆரணி ஆறு ஏரி குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் பெரிய வகை மீன்கள் ஏராளமாக குவிந்து உள்ளன. இந்த நிலையில் தூண்டில் மற்றும் வலைகளை பயன்படுத்தி சின்னக்காவனம் பாலம் அருகே அதிகமானோர் மீன்பிடித்து வருகின்றனர்.
கெண்டை, ஜிலேபி, கெளுத்தி மீன்கள் அதிகமாக பிடிக்கப்பட்டு வருகிறது. 5 கிலோ வரை மீன்கள் சிக்குகின்றன. இவை கிலோ ரூ.250 முதல், முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. உயிருடன் பிடித்து அங்கே கொடுப்பதால் மீன் பிரியர்கள் ஏராளமானோர் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.