தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நாளை தொடக்கம்

Published On 2022-12-14 04:51 GMT   |   Update On 2022-12-14 05:34 GMT
  • 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.
  • தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நாளை (15-ந்தேதி) முதல் தொடங்குகிறது.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் வினியோகிக்கப்படும்.

அரையாண்டுத்தேர்வு 23-ந்தேதி முடிவடைந்தவுடன் 24-ந்தேதி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. ஜனவரி 2-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கும் 3-வது பருவத்தேர்வு தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் வரை அனைத்து வகுப்புகளுக்கும்  தேர்வு நடைபெறுகிறது.

Tags:    

Similar News