தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- புதுச்சேரி, கேரளா, தெற்கு உள் கர்நாடகாவிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும், கோவையில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் புதுச்சேரி, கேரளா, தெற்கு உள் கர்நாடகாவிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்கறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.