தமிழ்நாடு (Tamil Nadu)

கமல் 'இந்தியா' பக்கம் இருக்கிறாரா ?

Published On 2023-07-22 07:44 GMT   |   Update On 2023-07-22 07:44 GMT
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
  • இளங்கோவனும் பெரியார் பேரன்தான். நானும் பெரியார் பேரன்தான் என்றார்.

கமல், ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் அவருடன் நீண்டநேரம் நடத்திய ஆலோசனையை வைத்து அவர் காங்கிரஸ் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது சின்னம், கட்சி, கொடி எல்லாவற்றையும் தாண்டியது தேசம். அதை காக்க வேண்டும் என்று வரும்போது யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இளங்கோவனும் பெரியார் பேரன்தான். நானும் பெரியார் பேரன்தான் என்றார்.

இந்த நிலையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் நடந்தபோது கமல் ஏன் பங்கேற்கவில்லை? அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அழைப்பு வந்ததா என்பதை மக்கள் நீதிமய்யம் கட்சியினர் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் கமல் இந்தியா பக்கம் வருவார் என்று தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்தனர். அது அவர் இந்தியாவுக்கு வருவதை குறிக்குமா? அல்லது இந்தியா கூட்டணிக்கு வருவதை குறிக்குமா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

Tags:    

Similar News