தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் 4-ந்தேதி கார்கே ஆலோசனை
- கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர்களை வருகிற 4-ந்தேதி டெல்லிக்கு வரும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே அழைத்துள்ளார்.
மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, 8 எம்.பி.க்கள் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இவர்களுடன் டெல்லியில் அகில இந்திய தலைவர் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம், கட்சி செயல்பாடு, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.