தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,873 கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- நேற்று 102.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. எனினும் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 1,723 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,873 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 102.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.