புளியந்தோப்பில் 'பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை- அமைச்சர் திறந்து வைத்தார்
- சி.டி.ஸ்கேன் வசதிகளுடன் பிரைட் சூப்பர் ஸ்பெஷா லிட்டி என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் எஸ்.சொக்கலிங்கம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை புளியந்தோப்பில் பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் திரு.வி.க.நகர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தாயகம் கவி, மருத்துவமனை நிறுவனர் எஸ்.சீனிவாசன், நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.சொக்கலிங்கம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.சொக்க லிங்கம் கூறுகையில், முத்து மருத்துவமனை என்ற பெயரில் 14 ஆண்டுகளாக இயங்கி வந்த இம்மருத்துவ மனையில், தற்போது எக்மோ, ஆஞ்சியோ பிளாஸ்டிக் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், 20 படுக்கை கொண்ட நவீன தீவிர சிகிச்சைப்பிரிவு, சி.டி.ஸ்கேன் வசதிகளுடன் பிரைட் சூப்பர் ஸ்பெஷா லிட்டி என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு இதுவரை 13 கிட்னி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகளும் உள்ளது. மற்ற தனியார் மருத்துவமனையை காட்டிலும் 50 முதல் 70 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு மாதம் ஆயிரம் பேருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. குறிப்பாக அரசு காப்பீடு திட்டத்தில் எண்ணற்றவர்களுக்கு இங்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.