தமிழ்நாடு
மார்த்தாண்டம்- களியக்காவிளையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த்
- தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
- காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கன்னியாக்குமரி:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை இன்று திருக்குவளையில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை முன்னிட்டு முதலமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை மார்த்தாண்டம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் களியக்காவிளை தொடக்க பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.