பள்ளி கட்டிடம் சேதம்: நாவலூர் பள்ளிக்கு புதிய கட்டிடம் மாணவர்கள்-பெற்றோர்கள் கோரிக்கை
- பள்ளி மைதானத்தில் வெயிலில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- வெயிலின் தாக்கத்தால் பள்ளி வளாகத்தில் படித்து வரும் மாணவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
நாவலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பள்ளி வளாகம் தற்போது இடிந்த நிலையில் உள்ளதால் மாணவ மாணவிகள் படிப்பதற்கு வளாக வசதிகள் இல்லாததால் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி மைதானத்தில் வெயிலில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் 459 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கத்தால் பள்ளி வளாகத்தில் படித்து வரும் மாணவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளியின் முதன்மை ஆசிரியர், மற்றும் மாணவர்களின் பெற்றோர் அரசு அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்த போது புதியதாக கட்டிடம் கட்டித் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி மாணவர்கள் வெயிலில் படிக்கும் நிலை நீடித்தால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து விரைவில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.