தமிழ்நாடு
நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் விஜய்
- கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
- நெல்லை கே.டி.சி. நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
நெல்லை கே.டி.சி. நகரில் காலை 11 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்குகிறார்.