தமிழ்நாடு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
- இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அவர்கள் அறிவித்தனர்.