தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணி: நேரமும், காலமும் வரும்போது அறிவிப்போம் - அண்ணாமலை

Published On 2025-03-05 20:23 IST   |   Update On 2025-03-05 20:23:00 IST
  • பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.
  • வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார் என அண்ணாமலை தெரிவித்தார்.

நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் கூட்டணி குறித்து நேரமும் காலமும் வரும்போது பாஜக அறிவிக்கும். வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என அண்ணன் இபிஎஸ் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News