தமிழ்நாடு
அனைத்துக்கட்சி கூட்டம்- 5 கட்சிகள் புறக்கணிப்பு
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
- அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சி, இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சி, இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 5 கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை.
பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்துள்ளன.