தமிழ்நாடு

மெட்ரோ ரெயில் பயணிகள் கவனத்திற்கு...

Published On 2025-03-08 08:52 IST   |   Update On 2025-03-08 09:17:00 IST
  • தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள்.
  • நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை. பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு பயணிகளைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 



Tags:    

Similar News