தமிழ்நாடு

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு?

Published On 2025-03-09 10:42 IST   |   Update On 2025-03-09 10:55:00 IST
  • பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
  • கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.

அந்தவகையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெறும் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தென்னிந்திய மாநில கட்சி தலைவர்களை அழைக்க தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழுப்புவது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News