தமிழ்நாடு

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2025-03-09 11:59 IST   |   Update On 2025-03-09 11:59:00 IST
  • எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
  • தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* மக்களவை தொகுதிகளை பாதுகாக்கும் முதல்வரின் முயற்சியில் துணை நின்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

* தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.

* தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைத்து செயல்படுவோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News