தமிழ்நாடு

ஏழு முக்கிய பிரச்சனைகளை எதிர்த்து #Get Out கையெழுத்து இயக்கம்

Published On 2025-02-26 11:13 IST   |   Update On 2025-02-26 11:19:00 IST
  • விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.
  • த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.

முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன்பின், 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார்.

இதனை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் எதிராக நடைபெற்று வரும் பெருந்துயரை கண்டும் காணாத பொறுப்பற்ற தன்மை.

* விமர்சனத்திற்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை அடக்கும் அரசியல் கோழைத்தனம்.

* வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் சமூக சீர்கெடுகளை எதிர்க்க அஞ்ச கூடிய நயவஞ்சகம்.

* திறனற்ற ஆட்சி நிர்வாகம், சாமானியர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் நோக்கத்துடன் ஊக்குவிக்கும் வகையில் செயலற்று கிடப்பது.

* ஒரு சிலரின் குடும்பத்தின் பேராசை, பசிக்காக நடக்கக்கூடிய திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்கை சுரண்டலும் மாறி மாறி திரைமறைவில் ரகசியமாக உறவு வைத்திருக்ககூடியவர்களை கரப்ஷன் கபட காரர்களை Get out சொல்லி கையெழுத்து இயக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். 

Tags:    

Similar News