தமிழ்நாடு
கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தொழில்துறையிடம் கேளுங்கள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது.
- டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுமா" என்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது. டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.
எனவே சரியான இடத்தில் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த துறையில் கேட்டால் கிடைக்கும். என்னுடைய துறையில் அந்த உரிமைகள் இல்லை" என்று பதில் அளித்தார்.