தமிழ்நாடு
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வரும்- அமைச்சர் தகவல்
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
- ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் புதிய டெண்டர் விடப்படும்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் புதிய டெண்டர் விடப்படும்.
தமிழகம் முழுவதும் பயனீட்டாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.