தமிழ்நாடு

அகழாய்வில் கிடைத்த சுடுமண் காதணி... தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்கள்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2025-03-08 09:11 IST   |   Update On 2025-03-08 09:11:00 IST
  • தமிழரின் மரபையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டை திகழ்ந்து வருகிறது.
  • கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பும் கிடைத்து இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சுடுமண் முத்திரைகள், சுடுமண் பொம்மைகள், தீப விளக்குகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது முதன்முறையாக சுடுமண் காதணி சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்:-

தமிழரின் மரபையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அங்கு விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது முழுமையான சுடுமணி காதணி கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பாகும். அதுமட்டுமின்றி கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பும் கிடைத்து இருக்கிறது. மேலும் மணிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்கள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News